மன்னார்குடி, ஜூலை 31: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் 104 ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் ஆதிதிராவிட பள்ளிகள் என தொடக்க கல்வி துறையில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கான காணொலி வாயிலான இணைய வழி கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து, மாணவர்கள் ஆதார் , உதவித்தொகை , இடைநிற்றல், மற்றும் திறன் மாணவர்கள் தேர்வு, தேசிய திறனறி தேர்வு போன்றவை குறித்து விளக்கி கூறினார். வட்டார கல்வி அலுவலர்கள் விர்ஜின் ஜோனா , ராமசாமி ஆகியோர், தேன்சிட்டு, ஊஞ்சல் , கனவு ஆசிரியர் பயன்பாடு, விழுமக் கல்வி , மெல்லக் கற்கும் மாணவர்கள் பட்டியல் , திறன் மாணவர்கள் தேர்வு நூலகச் செயல் பாடு,
காலை உணவை கண்காணித்தல், கழிவறை சுத்தம், உதவித்தொகை செயல்பாடு, பொலிவுறு வகுப்பறை செயல்பாடு, ஹைடெக் லேப் செயல்பாடு, மணற்கேணி செயல்பாடு, வகுப்பறையில் உள்ள சுவர் களில் பாடம் சம்மந்தமான வரைபடம் வரைதல், மாணவர்கள் திரைப்படம் பள்ளி வளாக தூய்மை , எஸ்எம்சி கூட்டம், பணிப் பதிவேடுகள் பார்வை தினசரி அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
