பஸ் மோதி தொழிலாளி பலி

திருப்புவனம், ஆக.1: திருப்புவனம் அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(55). விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இவரும் இவரது உறவினர் கணேசனும் திருப்புவனத்தில் இருந்து அல்லி நகரம் நோக்கி டூவீலரில் சென்றனர். டூவீலரை கணேசன் ஓட்டினார்.

நான்கு வழிச்சாலை பிரிவை கடக்க முயன்ற போது, மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பஸ் வேகமாக டூவீலரில் மோதியது. இந்த விபத்தில் டூவீலர் பின்னால் அமர்ந்திருந்த ஈஸ்வரன் கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார். திருப்புவனம் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Related Stories: