ஒருநாள் பேட்டிங் தரவரிசை கில் மீண்டும் நம்பர் 1

துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். ஐசிசி நேற்று வெளியிட்ட ரேங்கிங்கில் அவர் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில் (801), நியூசிலாந்தின் டேரில் மிட்செல் (794), விராத் கோஹ்லி (767), ரோகித் ஷர்மா (758), ஆப்கானிஸ்தானின் இப்ராகிம் ஸத்ரன் (712) ஆகியோர் டாப் 5 இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். பந்துவீச்சு தரவரிசையில் ரஷித் கான் (682, ஆப்கான்), அப்ரார் அகமது (பாக்., 675), ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கி., 649), கேஷவ் மகராஜ் (தெ.ஆப்., 645), மிட்செல் சான்ட்னர் (நியூசி. 644) ஆகியோர் டாப் 5ல் உள்ளனர்.

Related Stories: