விலையை கட்டுப்படுத்த, கள்ளச்சந்தையை தடுக்க சர்க்கரை கையிருப்புக்கு கடும் கட்டுப்பாடு: வியாபாரிகளுக்கு 400 டன் மட்டுமே அனுமதி

புதுடெல்லி: சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த வியாபாரிகளுக்கான கையிருப்பு வரம்பை நிர்ணயித்து ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் சர்க்கரை வர்த்தகத்தில் சில இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் சர்க்கரையைக் கைமாற்றாமல் காகித அளவிலான வர்த்தகம் மூலமும், கள்ளச்சந்தையில் சேமித்து வைப்பதன் மூலமும் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர் நலனைப் பாதுகாக்கவும், சர்க்கரை விலையைச் சீராகப் பராமரிக்கவும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் ஒன்றிய உணவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில, நாட்டின் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், செயற்கையான தட்டுப்பாட்டைத் தடுக்கவும் சர்க்கரை கையிருப்புக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கப்படுகிறது.

இதன்படி, எந்தவொரு சர்க்கரை வியாபாரியும் எந்த நேரத்திலும் 400 டன்னுக்கு மேல் சர்க்கரையைச் சேமித்து வைக்க முடியாது. வரும் நவம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். வியாபாரிகளிடம் இருக்கும் கூடுதல் கையிருப்பை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் விற்பனை செய்ய வேண்டும். மேலும் ஆலையிலிருந்து சர்க்கரையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அதை விற்பனை செய்ய வேண்டும். சர்க்கரையின் தற்போதைய தேவை மற்றும் விநியோகச் சூழலுக்கு மாறாக, ஆலைகளில் அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மழைப்பொழிவு குறையும் என்ற கணிப்பால் விலை உயர்வதைத் தடுக்க, சர்க்கரை ஏற்றுமதிக்கும் ஒன்றிய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. அதேவேளையில், மாநில அரசு நியமித்த வியாபாரிகள் மற்றும் அரசு கணக்கில் உள்ள கையிருப்புக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: