தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம் – மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: எதிர்கட்சியினரின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் பொதுத் தேர்வு (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லி ஜந்தர்மந்தரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு, இதனால் எழுந்த கூச்சல் குழப்பங்கள் மற்றும் அனல் பறக்கும் விவாதங்களுக்கு மத்தியில், வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களை இந்த மசோதா வழங்குகிறது. பொதுத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதமும், வினாத்தாள் கசிவு மற்றும் கூட்டுச் சதியில் ஈடுபடுவோருக்கு ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க இந்த மசோதா வழிசெய்கிறது.

Related Stories: