சென்னை: 6 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை தி.மு.க. போராடிப் பெற்று தந்தது. ஆனால் இன்றோ மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் வாய்பொத்தி நின்றதாகவும் சாடியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் அடுக்கடுக்காக எழுப்பும் பல கேள்விகளை பட்டியலிட்டு உள்ளார். அவை பின்வருமாறு:
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது. தவெக அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் அளித்தாக வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
