புதுடெல்லி: சர்க்கரையின் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, எந்தவொரு சர்க்கரை வியாபாரியும் 30 நாட்களுக்கு மேல் சரக்கை இருப்பு வைத்திருக்கக்கூடாது என்றும், 4,000 குவிண்டால் என்ற இருப்பு வரம்பைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் சர்க்கரையின் ஆலை விலை கிலோவுக்கு ரூ. 39-லிருந்து ரூ. 45-ஆக உயர்ந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த இருப்பு வரம்பு விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
