கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கடிதம்

திருவனந்தபுரம்: தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பது: தமிழக அரசு ஜல்லிக்கற்கள் மற்றும் பிற கட்டுமானப் பொருட்கள், கனிமங்களின் மாநிலங்களுக்கு இடையான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருப்பதை அறிந்துள்ளேன். இதன் விளைவாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு ஜல்லிக்கற்கள் கொண்டு வருவது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு தேவையான ஜல்லிக்கற்களின் முக்கிய ஆதாரமாக இம்மாவட்டங்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் கொள்கை நோக்கங்களையும், இயற்கை வளங்களை நிலைத்தன்மையுடன் நிர்வகிக்க வேண்டிய அவசியத்தையும் நான் முழுமையாக மதிக்கிறேன். அதே வேளையில் தமிழ்நாடு அரசின் கொள்கை நோக்கங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சமநிலையான அணுகுமுறையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனவே கேரளத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டுமே தேவையான ஜல்லிக்கற்களை தடையின்றி கொண்டு செல்லும் வகையில் உரிய தளர்வுகளை வழங்கவோ அல்லது பொருத்தமான நடைமுறையை உருவாக்கவோ தங்களின் கனிவான தலையீட்டை வேண்டுகிறேன். இத்தகைய நடவடிக்கை, திட்டங்களை காலத்திற்குள் நிறைவேற்ற உதவுவதோடு இரு மாநிலங்களுக்கும் இடையேயான நீண்ட கால ஒத்துழைப்பு உணர்வை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு mtu; கடிதத்தில் குறிப்பிட்டுள்ளா

Related Stories: