×

திருநெல்வேலியில் திருக்கோயில் பணியாளர் சங்க 12வது பொதுக்குழு கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் 12வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, அனைத்து திருக்கோயில் பணியாளர்களும் தங்களின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நீண்ட காலமாக தமிழக அரசிடம் முறையிட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு இணையாக கோயில் பணியாளர்களுக்கும் வீட்டு வாடகை மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். கோயில்களில் நீண்ட காலம் வேலை பார்க்கும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும்.

மேலும், கோயில் வருமானத்தில் சம்பள செலவாக 40 சதவீதம் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதை பொது நிதியாக மாற்றி, அதன்மூலம் அனைத்து காயில் பணியாளர்களுக்கும் சம்பளத்தை மாதந்தோறும் முறையாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. பின்னர, இக்கோரிக்கைகளை அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சங்க நிர்வாகிகள் மனுக்களாக வழங்கி வலியுறுத்துகின்றனர்.

இப்பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் காப்பாளராக கண்டியூர் வீ.கண்ணன், மாநில தலைவராக தஞ்சாவூர் பரணிதரன், செயலாளர் தனசேகர், செயல் தலைவராக தேனி பழனியப்பன், பொருளாளராக கோவை முருகேசன், அமைப்பாளராக ஈரோடு கணபதி, கொள்கை பரப்பு செயலாளர் டிமிட்ரோ, தலைமை நிலைய செயலாளராக தாம்பரம் ரமேஷ், மகளிரணி செயலாளராக சிக்கல் கே.சந்தானலட்சுமி, தகவல் தொழில்நுட்ப செயலாளர் குகன் ஆகியோர் ஒருமனதாக புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : 12th General Committee Meeting ,Temple Employees Association ,Tirunelveli ,Chennai ,Tamil ,Nadu Temple Employees Association ,Tirunelveli district ,Tamil government ,
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில்...