திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் உடல் பருமன் உள்ளவர்கள் செல்ல தடை!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள 7-வது லிங்கமான குபேர லிங்கம் அருகில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் குகை போன்ற குறுகலான வாசல் உள்ளது. இதையடுத்து ஜூலை 24-ம் தேதி குடும்பத்தினருடன் கிரிவலம் வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் என்பவர் இடுக்கு பிள்ளையார் கோயில் வாசலின் வழியே உள்ளே நுழைந்தபோது வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, உடல் பருமனான பெண் ஒருவர் இதே போன்று குகை வாசல் வழியாக உள்ளே சென்று வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து பின்னர் மீட்கப்பட்டார். இதையடுத்து, பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, இடுக்கு பிள்ளையார் கோயிலின் வாயில் மிகக் குறுகலாக இருப்பதால் உடல் பருமன் உள்ளவர்கள், உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புப் பலகையையும் கோயில் நிர்வாகம் வைத்துள்ளது.

Related Stories: