நீட் விலக்கு சட்டம் இயற்ற கோரி விசிக நாளை ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது மாணவர்களின் சார்பில், காக்ரோச் ஜனதா பார்ட்டியால் முன்னெடுக்கப்பட்ட அறவழி போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி. தர்மேந்திர பிரதான் விலகலையடுத்து அப்பொறுப்பில் கல்வியாளர் ஒருவரை கல்வி அமைச்சராக நியமிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.

நீட் தேர்வு தேவையில்லை, மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை மாநில அரசுகளே நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே, எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதற்கான சட்ட மசோதாவை கொண்டுவந்து சட்டமாக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நாளை (27ம் தேதி) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பதால், அந்த ஆர்ப்பாட்டம் அதே நாளில் சென்னையில் மட்டும் எனது தலைமையில் நடைபெறும். இவ்வாறு தெரிவித் துள்ளார்.

Related Stories: