நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யுங்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீதியும் நீட் தேர்வும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது, நீட் தேர்வு அடிப்படையில் அநீதியானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

“நீதியும் நீட் தேர்வும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. நீட் தேர்வு அடிப்படையில் அநீதியானது.

என்னால் அனைத்து மாநிலங்களுக்கும் பேச முடியாவிட்டாலும், தமிழ்நாட்டிற்காக நிச்சயமாகப் பேச முடியும். பாஜகவைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கின்றன. நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் மீண்டும் தீர்மானங்களையும் சட்டமுன்வடிவுகளையும் (மசோதா) நிறைவேற்றியுள்ளது.

நியாயப்படுத்த முடியாத ஒன்றை நியாயப்படுத்துவதை நிறுத்துங்கள். #ScrapNEET – நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யுங்கள்.

நாளை வெளியாகும் தி இந்து நாளிதழில் எனது கருத்துரையைப் (Op-ed) பாருங்கள்; அதில் நீட் தேர்வு ஏன் அடிப்படையில் அநீதியானது, அது ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை விரிவாக விளக்கியுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories: