ஜெனரிக் மருந்துகளுக்கு 200% வரி.. இந்திய நிறுவனங்களுக்கு நெருக்கடி தரும் அமெரிக்கா!

வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதியாகும் ஜெனரிக் மருந்துகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு 0% வரி தொடரும், ஆனால் 2028-ல் 100%, 2029 முதல் 200% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மருந்து உற்பத்தியை அமெரிக்காவிற்கு கொண்டுவருவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள ஜெனரிக் மருந்துகளில் சுமார் 40% இந்தியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஜெனரிக் மருந்துகளை வழங்குவதால், “உலகின் மருந்தகம்” என்று இந்தியா அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில், இந்திய ஜெனரிக் மருந்துகள் அளவின் அடிப்படையில் சுமார் 40 சதவீதத்தை உருவாக்குகின்றன. 2024-2025 நிதியாண்டில், இந்தியா 9.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது, அமெரிக்காவின் மொத்த உலகளாவிய மருந்து ஏற்றுமதியான 25.8 பில்லியன் அமெரிக்க டாலரில் 38 சதவீதமாகும் என உலக வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (Global Trade Research Initiative) அறிக்கை தெரிவித்தது.

Related Stories: