×

எங்களை நாயை விட மோசமாக நடத்தும் அரசு அதிகாரிகள்: அமைச்சரிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் சரமாரி குற்றச்சாட்டு

சிவகாசி: சிவகாசியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய உற்பத்தியாளர் ஒருவர், “பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டால் உடனேஆலையின் உரிமையாளர்களை கைது செய்வதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனிருந்து உதவ முடியாத சூழல் ஏற்படுகிறது.

ஆலை உரிமையாளர்கள் மீதான கைது நடவடிக்கையை கைவிட பரிசீலனை செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தினார்.  மற்றொரு பட்டாசு உற்பத்தியாளர், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் 60 பட்டாசு ஆலைகள் செயல்பட தயாராக இருந்தும் அதற்கான அனுமதி வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். அரசு அதிகாரிகள் எங்களை நாயை விட மோசமாக நடத்துகிறார்கள்.

பட்டாசு உற்பத்தியாளர் வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நேரத்தில், நமது நாட்டில் அதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ரூ.180 கோடி முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயாராக இருந்தும் அதை ஈர்க்க அரசு தயாராக இல்லை’’ என குற்றம் சாட்டினார். பின்னர் அமைச்சர் கீர்த்தனா, உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.

Tags : Sivakasi ,Industries Minister ,Keerthana ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...