×

சில்லி பாயிண்ட்

* ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்கதேச அணி 13ம் தேதி மற்றும் 22ம் தேதிகளில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

* உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா தொடர்ந்து 100 வாரங்கள் கடந்து முதலிடத்தை தக்க வைத்து சாதனை படைத்து உள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய 10வது வீராங்கனை என்ற வரலாற்று சிறப்பை அவர் பெற்று உள்ளார். 2024 மற்றும் 2025 என தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் நம்பர் 1 வீராங்கனையாக இருந்து உள்ளார்.

* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் எச்.எஸ்.பிரனாய், தேவிஜ்க சிஹாக் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர். லக்சயா சென், பி.வி.சிந்து உள்ளிட்டோர் இன்று விளையாட உள்ளனர்.

* ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த மாதம் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் மோஹித் எச்.எஸ், சூரஜ் கர்கேரா, ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய் சுமித், யஷ்தீப் சிவாச், ரஜிந்தர் சிங், ஆதித்யா அர்ஜுன் லலாகே, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, விவேக் சாகர் பிரசாத், தில்பிரீத் சிங், ஷீலானந்த் லக்ரா, ஷுக்தீக் சிங், மன்தீப் சிங், அபிஷேக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

* அயர்லாந்து (2-0), இங்கிலாந்து (4-0) எதிராக டி20 தொடர்களை இழந்த இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜிம்பாப்வேக்கு சென்று உள்ளது. முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகியதால் ரவி பிஷ்னோய் சேர்க்க்கப்பட்டுள்ளார்.

Tags : Australia ,Bad Cummins ,
× RELATED ஜூனில் சிறந்த வீரர் நாதன்ஸ்மித்: ஐசிசி அறிவிப்பு