லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 27 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 387ரன் எடுக்க இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்களே எடுத்தது. இந்த வெற்றிமூலம் 2-1 என இங்கிலாந்து தொடரை வென்றது. தோல்வி குறித்து இந்திய கேப்டன் கில் கூறுகையில், பவர்பிளேயில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதனைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தியதால் எங்களால் மீண்டு வர முடியவில்லை.
45வது ஓவர் வரை ஆட்டத்தில் வலுவாகவே இருந்தோம். ஆனால் கடைசி 3 ஓவர்களில் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்தோம். அங்கிருந்துதான் ஆட்டம் எங்கள் கையை விட்டு நழுவியது. ரோகித் ,கோஹ்லி உலகின் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இன்று (நேற்று) ரோகித் பேட்டிங் செய்த விதம் மகிழ்ச்சியளித்தது. ஆடுகளம் மெதுவாக மாறியதால் பேட் செய்வது எளிதாக இல்லை. ஆனாலும் அவரது ஆட்டத்தைப் பார்ப்பது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.”, என்றார்.
