சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக போராடும் இளைஞர்களை அச்சுறுத்தும் நோக்கில் பாடகர் அறிவு கைது செய்யப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு என்பது முரண்பாடுகளால் ஆனது மட்டுமல்ல, தற்போது மோசடியாகவும் மாறிவிட்டது. நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் அடக்கப்பட வேண்டியவை அல்ல, கேட்கப்பட வேண்டியவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
