நெல்லை: நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய மீரான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். போலியான மருத்துவ சீட்டு தயாரித்து மருந்தகத்தில் மருந்துகளை வாங்கி போதைக்காக பயன்படுத்தியுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகளை வாங்கி போதைக்கு பயன்படுத்தியது அம்பலமானது. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந் இளைஞரிடம் விசாரித்த போது அதிர்ச்சி தகவல்வெளியானது.
