×

தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெறும் பயிற்சி பெண் ஐபிஎஸ் அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்: பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு

 

திருமலை: தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெண் ஐபிஎஸ் அதிகாரியை கத்திமுனையில் மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய காவல் அகாடமி உள்ளது. இங்கு யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் ஐபிஎஸ் அந்தஸ்து பெற்ற ஆண், பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு பயிற்சி பெற்று வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், அதே அகாடமியில் பயிற்சி பெறும் ஒரு ஆண் ஐபிஎஸ் அதிகாரி மீது அட்டப்பூர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், இந்த அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஐபிஎஸ் அதிகாரியான உதய்கிருஷ்ண ரெட்டி எனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார். செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பி துன்புறுத்தி வருகிறார். கடந்த 9ம் தேதி எனது தலைமுடியை பிடித்து, கத்தியை காண்பித்து மிரட்டி ஒரு அறையில் வலுக்கட்டாயமாக தள்ளி பூட்டினார். பின்னர் அந்த அறையில் வைத்து ஆபாசமாக வீடியோ பதிவு செய்தார்.

எனது செல்போனையும் பறித்துக்கொண்ட அவர், அதில் ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் எனது கணவருக்கு அனுப்புவதாக மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இப்புகாரின்பேரில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய்கிருஷ்ண ரெட்டி மீது போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய காவல் பயிற்சி அகாடமி அதிகாரிகள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பயிற்சி பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகார் உண்மை என்பதை உறுதி செய்தனர். இதனால், பயிற்சியில் இரந்த உதய்கிருஷ்ண ரெட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தேசிய காவல் பயிற்சி அகாடமியில் மேலும், இதுபோன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களும் விரைவில் புகார் அளிக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருவதாகவும், அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

* தற்கொலை முயற்சி

ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல் பயிற்சி அகாடமியில் பெண் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய்கிருஷ்ண ரெட்டி திடீரென தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயக்க நிலையில் இருந்த உதய்கிருஷ்ண ரெட்டியை கவனித்த அவரது குடும்பத்தினர் உடனே மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர் ரவி சங்கர் ரெட்டி கூறியதாவது:

* போலீஸ்காரர் டூ ஐபிஎஸ்

உதய்கிருஷ்ண ரெட்டி ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிங்கராயகொண்டா ராவலபாலம் கிராமத்தை சேர்ந்தவர். சிறுவயதிலேயே பெற்றோர் இறந்த நிலையில் பாட்டி வீட்டில் வளர்ந்தார். காய்கறி விற்று பிழைப்பு நடத்தி வந்த அவர், 2013ம் ஆண்டு ஆந்திர மாநில காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். 2018 வரை பணி புரிந்த அவர், காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரால் அவமதிக்கப்பட்டார்.

இதனால் காவலர் பதவியை ராஜிமானா செய்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரான உதய்கிருஷ்ண ரெட்டி 4 முறை முயற்சிக்கு பின் 5வது முறையாக தேர்வெழுதி 360 ரேங்க் பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். இதன் மூலம் பலருக்கு உத்வேகமாக திகழ்ந்த உதய்கிருஷ்ண ரெட்டி, தற்போது தன்னுடன் பயிற்சிபெற்று வரும் ஐபிஎஸ் பெண் அதிகாரியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார் என்பது அதிர்ச்சி தரும் சம்பவமாக மாறியுள்ளது.

Tags : National Police Academy ,Hyderabad, Telangana ,UPSC… ,
× RELATED பரந்தூர் விமானநிலைய திட்டத்தை...