×

மாணவர்கள் மீது தடியடி ஜனநாயகத்திற்கு அவமானம்: ஜவாஹிருல்லா கண்டனம்

 

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை மீதான தொடர் நம்பிக்கையிழப்பு, கல்வித்துறையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல்வேறு முறைகேடுகள் ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட ஜனநாயகப் போராட்டத்தின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தியிருப்பது கண்ணீர்புகை குண்டு வீச்சு உள்ளிட்ட மிகக் கடுமையாக நடந்து கொண்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாத அரசு, தடியடியால் பதிலளிக்க முயல்வது ஜனநாயகத்திற்கு அவமானம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Jawahirullah ,Chennai ,Manithanaya Makkal Katchi ,M.H. Jawahirullah ,Union Education Minister ,Dharmendra ,NEET ,National Testing Agency ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி...