அண்ணா அவர்கள் தமிழ்நாடு என அவையில் முழங்கிய இந்நாளே “தமிழ்நாடு நாள்” – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஆண்டுதோறும் ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், 1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.

1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்! தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் ‘வாழ்க’ என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே “தமிழ்நாடு நாள்”! என்று உணர்ச்சிபொங்க தமிழக மக்களுக்கு தனது தமிழ்நாடு நாள் வாழ்த்தை தெரிவித்து கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

Related Stories: