செய்யாறில் கோயில் அருகில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் அதிரடி கைது

 

செய்யாறு, ஜூலை 18: செய்யாறில் கோயில் அருகில் 2 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விண்ணவாடி ஏரி அருகே உள்ள கெங்கையம்மன் கோயில் அருகே கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று ஆய்வு செய்தபோது கைப்பையுடன் நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். போலீசார் விரட்டிச்சென்றதில் ஒருவர் பிடிபட்டார். அவரது பையை சோதனையிட்டபோது, 2 கிலோ கஞ்சா இருந்தது.

விசாரணையில் அவர் வெம்பாக்கம் தாலுகா பெருங்கட்டூர் கிராமத்தை சேர்ந்த ரமணா(25) என்பதும், கஞ்சாவை விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமணாவை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய விண்ணவாடி கிராமத்தை சேர்ந்த பார்த்தீபன் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories: