நீட் யூஜி மறுதேர்வு முடிவுகள் 2026 வெளியீடு: 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!

டெல்லி: தேசிய தேர்வு முகமை நீட் யூஜி 2026 மறுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் மொத்தம் 11.21 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் 58 சதவீதத்திற்கும் அதிகமான மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த ஜூன் 21 அன்று நடந்த இந்த மறுதேர்வில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வர்கள் தங்களது மதிப்பெண் அட்டையை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்தேர்வில் பஞ்சாபின் ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவின் பன்ஷுல் பன்சால் ஆகியோர் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். 19 மாணவர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களையும், 138 மாணவர்கள் 690-க்கும் அதிகமான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். மாநில அளவில் உத்தரப் பிரதேசம் 1.7 லட்சம் தேர்ச்சிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 705 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற டாப் 17 மாணவர்கள் தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

பிரிவு வாரியாக, ஓபிசி பிரிவில் 5.12 லட்சம் பேரும், பொதுப் பிரிவில் 2.91 லட்சம் பேரும், எஸ்சி பிரிவில் 1.59 லட்சம் பேரும், எஸ்டி பிரிவில் 63,716 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவக் கலந்தாய்வு மற்றும் சேர்க்கை செயல்முறைகள் திட்டமிட்டபடி தடையின்றி நடப்பதை உறுதி செய்ய இம்முடிவுகள் விரைவாக வெளியிடப்பட்டுள்ளன.

Related Stories: