×

உ.பி.யில் பயங்கரம் ரூ.150கோடி சொத்துக்காக தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மகன்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள புதானா கிராமத்தை சேர்ந்தவர் ஹரியோம் சவுத்ரி(52). அந்த கிராமத்திலேயே மிகவும் வசதியான விவசாயிகளில் ஒருவராக கருதப்பட்டார். இவருக்கு சுமார் ரூ.150கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. இவரது மூத்த மகன் நிகில், இளைய மகன் நீஷூ. மூத்த மகன் நிகிலுக்கு மதுப்பழக்கம் இருந்ததாக தெரிகின்றது. இதன் காரணமாக சவுத்ரி அடிக்கடி மகனை திட்டியும் கண்டித்தும் வந்துள்ளார்.

மேலும் சொத்துக்களை எழுதித்தரும்படியும் நிகில் தனது தந்தையிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகின்றது. இந்த பிரச்னையில் நிகில் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தந்தையை சுட்டு கொன்று விட்டு தப்பிச்சென்றார். தலைமறைவான நிகிலை பிடிப்பதற்காக நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Tags : UP ,New Delhi ,Hariyom Chaudhary ,Budhana ,Ghaziabad, Uttar Pradesh ,Nikhil ,Neeshu ,
× RELATED நவோதயா வித்யாலயா பள்ளி குறித்த வழக்கு...