×

முதுமை, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் கொள்கையை வகுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: முதுமை அடைந்த அல்லது குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான கொள்கையை 3 மாதங்களுக்குள் வகுத்து அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முதுமை (70 வயதுக்கு மேற்பட்டவர்கள்) அல்லது குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட தண்டனை பெற்ற கைதிகள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்த தீவிரமான மற்றும் அமைப்புரீதியான கவலைகளை எழுப்பி தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:

முதுமை அடைந்த அல்லது குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான கொள்கையை 3 மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் வகுக்க வேண்டும். இந்தக் கொள்கையானது விடுவிப்புக்கான தகுதி அளவுகோல்கள் மற்றும் நடைமுறை கட்டமைப்பைத் தெளிவாக வரையறுக்க வேண்டும் .

குறிப்பாக குணப்படுத்த முடியாத நோய் என்பதற்கான தெளிவான மற்றும் சீரான வரையறையை வெளிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அரசியலமைப்பு ரீதியான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதை, அரசியலமைப்பு ரீதியான கடமையிலிருந்து விலகிச் செல்வதாகக் கருத முடியாது. சட்டமன்றம் அல்லது நிர்வாகத்தின் செயலற்ற தன்மையால் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து அல்லது அமைப்புரீதியாக மீறப்படும் சூழலில், இந்த நீதிமன்றம் வெறும் பார்வையாளராக இருக்க முடியாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,New Delhi ,
× RELATED லட்சக்கணக்கானோர் திரண்ட பூரி...