×

ரயில் டிக்கெட் விரைவாக முன்பதிவு செய்ய புதிய ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகம்

புதுடெல்லி: இந்திய ரயில்வே தனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐஆர்சிடிசி புதிய இணையதளத்தின் ‘பீட்டா’ பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தின் மூலம் விரைவான டிக்கெட் முன்பதிவு, மேம்படுத்தப்பட்ட இருக்கை இருப்பு சரிபார்ப்பு மற்றும் அதிக முன்பதிவு வசதி ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ‘தட்கல்’ போன்ற அதிக முன்பதிவு தேவைப்படும் நேரங்களில், இணையதளத்திற்கு வரும் அதிகப்படியான பயனர்களின் வருகையை திறம்படக் கையாளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தளம் தினமும் சராசரியாக 14.5 லட்சம் டிக்கெட் முன்பதிவுகளைக் கையாளுகிறது. மேம்படுத்தப்பட்ட இணையதளம், அதிக முன்பதிவு தேவைப்படும் நேரங்களில் இன்னும் அதிகமான முன்பதிவு கோரிக்கைகளைச் செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது சோதனை நிலையில் உள்ளது. முழுமையான பதிப்பு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக, பயனர்களிடமிருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் இதில் மேலும் பல மேம்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : IRCTC ,New Delhi ,Indian Railways ,
× RELATED நவோதயா வித்யாலயா பள்ளி குறித்த வழக்கு...