×

பெங்களூரூவில் ரூ.5லட்சம் லஞ்சம் பொதுத்துறை நிறுவன நிர்வாக இயக்குனர் கைது

புதுடெல்லி: கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த பொதுத்துறை நிறுவனம் கர்நாடகா ஆன்டிபயாடிக்ஸ் அன்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனுராக் தனயக். இவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு மருந்துகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போபாலைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.15லட்சத்தை லஞ்சமாக கோரியிருந்ததாக தெரிகின்றது. நொய்டாவில் நேற்று முன்தினம் லஞ்சத்தில் ஒரு பகுதியாக ரூ.5லட்சத்தை அனுராக் வாங்கும்போது சிபிஐ அதிகாரிகள் பொறிவைத்து அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

Tags : Bengaluru ,New Delhi ,Karnataka Antibiotics and Pharmaceuticals Limited ,Bengaluru, Karnataka ,Anurag Thanayak ,Bhopal ,Madhya Pradesh ,
× RELATED லட்சக்கணக்கானோர் திரண்ட பூரி...