தூய்மை பணியாளர்கள் முற்றுகை

மதுரை, அவனியாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மருதுபாண்டி வந்தார். அப்போது அங்கிருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீரென அவரை முற்றுகையிட்டனர்.

பின்னர் தங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றும், அறிவிக்கப்பட்டதை விட குறைவான ஊதியமே தருவதாகவும் அவர்கள் புகார் அளித்தனர். இந்த பிரச்னை தொடர்பாக மதுரை மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சர் நிர்மல்குமாரிடம் தகவல் தெரிவித்து, இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மருதுபாண்டி கூறினார். இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்

 

Related Stories: