வருசநாடு, ஜூலை 16: கடமலைக்குண்டு அருகே ஓடையில் மணல் திருடப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து கடமலைக்குண்டு எஸ்.ஐ. பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, அருகுவெளி ஓடையில் இரண்டு பேர் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.
அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் 12 சிமென்ட் சாக்கு பைகளில் வைத்திருந்த மணல் மூடைகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மூலக்கடை அருகே ஆலந்தளீர் கிராமத்தைச் சேர்ந்த மதுரைவீரன்(70), பாலமுருகன்(41) என்பது தெரிய வந்தது. மேலும் மணல் திருடியதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
