×

ஜெயக்குமாரின் குட்டி ஸ்டோரி..! வெயில் கொடுமை தாங்காமல் பாம்பின் (தவெக) நிழலில் ஒதுங்கிய தவளை (தமிழக மக்கள்)

சென்னை: சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழகத்தில் ஒருபக்கம் பவர்கட், மறுபக்கம் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என மக்கள் மிகவும் துயரத்திற்குள்ளாகி உள்ளனர் என்றார்.

அதே போல தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து லாக்அப் மரணங்கள் அதிகரித்து வருகின்றது. ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் வைத்திருப்பது தொடர்பாக கைது செய்யப்பட்டால், நடவடிக்கை எடுக்காமல் விசாரிக்கப்பட்டு உடனே விடுவிக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் நாகர்கோவிலில் சிறை காவலர்களால் அடித்து கொல்லப்பட்ட சபரிவர்மன் 3 பாக்கெட் (200 கிராம்) குட்காவை விற்பனைக்காக வைத்திருந்துள்ளார். இதற்காக அவரை அடித்தே கொன்றுள்ளார்கள்.

தமிழகத்தின் நிலை இப்படி இருக்க தமிழக முதல்வர் விஜய் இதுவரை எந்த பிரச்னைக்காகவாவது பத்திரிகையாளர்களை சந்தித்து, பேசி இருக்கிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. விரைவில் மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் பல அடிப்படை வசதிகளை மேம்படுத்த இன்னும் டெண்டர் விடப்படவில்லை. தூக்கத்தில் இருக்கும் தவெக அரசு எப்போது தான் விழிக்க போகிறதோ!

அதே போல் தவளை ஒன்று வெயிலின் கொடுமை தாங்காமல் படமெடுத்து ஆடிய பாம்பின் நிழலில் போய் ஒதுங்கியதாம், இது தான் தமிழக மக்களின் தற்போதைய பரிதாப நிலை என்று குட்டி ஸ்டோரியுடன் பேட்டியை முடித்தார் டி.ஜெயக்குமார்.

Tags : JAYAKUMAR ,Chennai ,Minister ,T. Jayakumar ,Tamil Nadu ,Takeka government ,
× RELATED சொல்லிட்டாங்க…