சென்னை: மருத்துவக் கல்லூரி தொடங்க லஞ்சம் கொடுத்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக கல்வியாளர் ஐசரி கணேசன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐசரி கணேசன் மனுவை திரும்பப் பெற ஒப்புக்கொண்டதால் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. 2024-ல் டிவிஏசி வழக்கை முடித்தபோதும் ED ஆட்சேபனை தெரிவித்ததால் ஐசரி கணேசன் மனுவை திரும்ப பெற்றார்.
