இங்கிலாந்தில் ஈரான் ஆதரவு அமைப்புக்கு தடை

 

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் யூதர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் யூத அமைப்புகள் மீது சமீபத்தில் நடைபெற்ற தீவைப்பு மற்றும் சேதப்படுத்தும் தாக்குதல்களுக்கு ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பு காரணம் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, இஸ்லாமிக் மூவ்மென்ட் ஆப் தி கம்பேனியன்ஸ் ஆப் தி ரைட் (ஐஎம்சிஆர்) என்ற அமைப்புக்கும், ஈரானின் துணை ராணுவமான இஸ்லாமிய புரட்சிகர காவல் படைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஞ்சலா ஈகிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், லண்டனில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள், யூத தொண்டு நிறுவன ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஈரான் அரசை விமர்சிக்கும் பாரசீக மொழி ஊடக நிறுவனம் மீது நடந்த ஏழு தாக்குதல்களுக்கு ஐஎம்சிஆர் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

Related Stories: