×

பவன் கல்யாணுக்கு தோள்பட்டை ஆபரேஷன்

திருமலை: ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாணுக்கு தோள்பட்டையில் நேற்று ஆபரேஷன் நடந்தது. ஆந்திர மாநில துணைமுதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன்கல்யாணுக்கு கடந்த 2016ம் ஆண்டு யாத்திரை மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டநெரிசலில் அவரது கைகள் மற்றும் தோள்பட்டைகளில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று காலை அவரது வலது தோளில் ஏற்பட்ட ரோட்டேட்டர் கப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சுமார் மூன்றரை மணிநேரம் நீடித்தது. மற்றொரு தோளுக்கான அறுவை சிகிச்சை இரண்டு மாதங்களுக்கு பின்னர் செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Pawan Kalyan ,Tirumala ,Andhra Pradesh ,Deputy Chief Minister ,Deputy ,Chief Minister ,Jana Sena Party ,
× RELATED ‘இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே...