- காவல்துறை
- மேற்கு வங்கம்
- பகிரி
- முதல் அமைச்சர்
- கொல்கத்தா
- மேற்கு
- வங்கம்
- பாஜக
- சுவேந்து அதிகாரி
- வட பிரிவு
- காவல்துறை துணை ஆணையர்…
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் காவல்துறை வாட்ஸ்அப் குழுவில் சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரத்தில் காவல் துணை ஆணையர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் தற்போது சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ ஆட்சியில் உள்ளது. இங்கு வடக்கு பிரிவு காவல் துணை ஆணையராக பிதான் சாஹா மற்றும் துறைமுக பிரிவு காவல் துணை ஆணையராகபார்த்தா பிரதீம் தாஸ் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் கடந்த 2025ம் ஆண்டு காவல் துறையினருக்கான வாட்ஸ்அப் குழுவில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, ஒரு அதிகாரி அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பதிவிட்டதாகவும், மற்றொரு அதிகாரி அந்த கருத்துகளை ஆதரித்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த புகார்கள் குறித்து கொல்கத்தா காவல் துறை விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று காவல் துணை ஆணையர்கள் பிதான் சாஹா மற்றும் பார்த்தா பிரதீம் தாஸ் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘‘காவல்துறையினர், குறிப்பாக மூத்த அதிகாரிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பொதுமக்களின் கண்ணோடடங்களையோ அல்லது காவல் துறையின் பிம்பத்தையோ பாதிக்க கூடிய எந்தவொரு கருத்தும் விதிகளின்படி ஆய்வு செய்யப்படுகிறது” என்றனர்.
