எங்கள் அணி மீது இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாகவே இது போன்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இது ஒன்றும் புதிதல்ல. நடுவர்கள் எங்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள், பிபா எங்களை ஆதரிக்கிறது என்று சொல்பவர்களின் நோக்கம் எல்லாம் நாங்கள் ஜெயித்துவிடக் கூடாது என்பது தான்.
அதற்காகவே எங்களை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 1986ல் இருந்து இதை கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டோம்.வேற்று நாட்டு அணி வெற்றி பெறுவதை பலர் விரும்பமாட்டார்கள் அல்லவா. அதனால் இது சகஜமானதே. அதே சமயம், இது போன்ற விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எங்களை மேலும் உறுதியோடு, முனைப்போடு விளையாடத் தூண்டுகின்றன. அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி
