- நைட்
- இ.
- ராதாகிருஷ்ணன்
- சென்னை
- துணைத் தலைவர்
- குடியரசு
- சி. பி. ராதகிருஷ்ணன்
- நைட் பியூட்டி முத்துகோன்
- துணைத் தலைவர்
சென்னை: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமது சமூக வலைதள பதிவில், “வீரத்திற்கும் விடுதலை உணர்விற்கும் அடையாளமான மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளில் அவருக்கு எனது புகழஞ்சலியையும் மரியாதையையும் செலுத்துகிறேன்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை ஆரம்ப காலத்திலேயே துணிச்சலுடன் எதிர்த்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் போராடிய முன்னோடி வீரர் அவர். அவரது வீரமும், அடக்குமுறைக்கு எதிரான உறுதியான நிலைப்பாடும், தாயகத்திற்காக உயிரையே அர்ப்பணித்த தியாகமும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்” என்று புகழாரம் சூட்டினார்.
