×

பாடகி எஸ்.ஜானகி மறைவு இல்லங்களிலும், நெஞ்சங்களிலும் ஒலித்துக் கொண்டே இருப்பார்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பிரபல பின்னணி பாடகி ஜானகி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘‘இசைக்குயில் எஸ்.ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி இசைப்பயணம் மிக நீண்டது.

அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு ரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.

இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Tags : S. Janaki ,DMK ,M.K. Stalin ,Chennai ,Janaki ,MS. Viswanathan ,
× RELATED மாவீரர் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்