- கரூர்
- ஜெயக்குமார்
- விஜய்
- சென்னை
- முன்னாள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- டி.ஜயகுமார்
- அழகமுத்துகோன்
- எழும்பூர்
- முதல் அமைச்சர்
சென்னை: அழகுமுத்துகோன் பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூரில் அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் கரூரில் நிகழ்த்திய உரை வழக்கமான ஸ்கிரிப்ட்தான். புதிதாக எதுவும் இல்லை. ஒரு முதல்வர் மிகவும் ராஜதந்திர தன்மையுடன் பேச வேண்டும். ஆனால், அவர் சினிமா வசனங்களை ஒப்புவிப்பது போல பேசியுள்ளார்.
ராஜதந்திர தன்மை அறவே இல்லை. இடைத்தேர்தலை மனதில் வைத்தே அவரது பயணம் அமைந்தது. 32 குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்திருந்தால், அதன் வட்டி மூலம் அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற முடியும். ஆனால், அரசு வேலைக்கு தயாராகும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்களின் வாய்ப்பை ஏன் பறிக்க வேண்டும்? இதுதான் தற்போது இளைஞர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. இவ்வாறு பேசினார்.
