புதுடெல்லி: கர்நாடகா மாநிலம் மைசூரில் 44 வாடிக்கையாளர்களின் அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் இருந்து, அவர்களின் உள்நுழைவு விவரங்களை தவறாகப் பயன்படுத்தி சுமார் ரூ. 1.3 கோடி தொகையை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. 2022-2025 காலகட்டத்தில் அஞ்சலக சேமிப்புக் கணக்குகளிலிருந்து பணத்தை திட்டமிட்டு கையாடல் செய்து, அந்த நிதியைத் அஞ்சல் அதிகாரிகள் தங்கள் உறவினர்களின் கணக்குகளிலும் தங்கள் சொந்தக் கணக்குகளிலும் அவர்கள் டெபாசிட் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து மைசூரின் சரகூர் குதியில் பணியில் இருந்த அஞ்சல் உதவியாளர் மற்றும் அஞ்சல்காரர் ஆகிய குற்றம் சாட்டப்பட்ட இருவரும், இந்த மோசடி தொடர்பாக சிபிஐயின் பெங்களூரு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
