பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குரங்கு அருவி எனப்படும் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் நீரின் அளவு சீரானால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
