முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என திமுகவினர் சாலை மறியல்

தூத்துக்குடி: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஜூன் 20 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அத்தொகுதியின் எம்எல்ஏவும் திமுக முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன், ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வு செய்யச்சென்ற போது அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அனிதா ராதாகிருஷ்ணன் கைது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: