×

‘தமிழகத்தில் இணையாட்சியை உருவாக்க திட்டமா?’ ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. கேள்வி

மதுரை: மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: ஆளுநர் அவர்களே, கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றச் சென்றபோது, கூவம் ஆற்றைக் கடந்துதானே சென்றீர்கள்? அங்கே ஆற்று நீர் தெள்ளத்தெளிவாகவா ஓடிக்கொண்டிருந்தது? அங்கு ஆளுநர் மாளிகை களத்தில் இறங்க வேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லையா?

ஆளுநர் மாளிகை நேரடியாகத் தலையிடும் என்று நீங்கள் கூறுவதன் நோக்கம் பிரச்னையை தீர்ப்பதற்கல்ல, மாறாக ஓர் இணையாட்சி நிர்வாகத்தை உருவாக்கவே. ஆளுநர்களின் அரசியல் நோக்கங்களை முறியடித்த வரலாறு கொண்டதுதான் தமிழ்நாடு. சந்தேகம் ஏதும் இருந்தால் ஆர்.என்.ரவியிடம் கேட்டு பாருங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Madurai ,Su. Venkatesan ,Governor ,Tamil Nadu Legislative Assembly ,Coovam River ,
× RELATED தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார்