உடுமலை: உடுமலையில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அண்ணாமலை பேசியதாவது: வி த லீடர்ஸ் அமைப்புக்கு இந்த மருத்துவமனை சார்பில் 100 கார்டு தருவதாக கூறினர். அந்த கார்டை கொண்டு வருபவர்களுக்கு ஒரு பைசா கூட வாங்காமல் சிகிச்சை அளிப்போம்.
நாங்களும் கஷ்டப்பட்டவர்களிடம் கார்டை கொடுத்து அனுப்புகிறோம். வி த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் வரும் 12ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும். 26ம் தேதி திருச்செந்தூரில் 2வது மாநாடு நடைபெறும். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
