சென்னை: புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமானோர் நேற்று தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
வடக்கில் பாஜ பயன்படுத்தி வந்ததைப் போன்ற ‘வாஷிங்மெஷின்’ ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா? இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
