திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியல்: உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

 

சென்னை: சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியலை மக்கள் பார்த்து கொண்டு உள்ளனர். திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் தவெகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த சோபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அதிமுகவின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6வது எம்எல்ஏவாக இன்று (நேற்று) பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு தீவிரமாகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் எம்எல்ஏக்கள் பர்சேஸ் தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம். “தொட மாட்டேன்-தொட்டா விட மாட்டேன்” என்று ஸ்கிரிப்ட்படி பொங்கிய முதல்வர், அடுத்த காட்சியில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?. சோபா மாடல் அரசின் இந்த வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: