வனப்பகுதி சாலையில் பிக்கப் வாகனத்தில் ஆபத்தான பயணம் : பெண்கள் மற்றும் சிறுவர்களை ஏற்றி கொண்டு அதிவேகமாக சென்ற சரக்கு வாகனத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் சரக்கு ஏற்றி செல்லும் பிக்கப் வாகனத்தில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட சம்பவம் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்தது

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அஞ்செட்டி வனப்பகுதி சாலையானது மேடு பள்ளங்களையும் பல வளைவுகளையும் கொண்டது இந்த பகுதியில் உள்ள திருமுக்கு வளைவில் பல்வேறு வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்கள் நடந்துள்ளது இந்த வனப்பகுதி சாலையில் பிக்கப் வாகனத்தில் ஓட்டுநர் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்டோரை ஏற்றி கொண்டு அதிவேகமாக சென்றது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஆகியோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக படம் பிடித்துள்ளனர் இந்த பிக்கப் வாகனம் அஞ்செட்டி நகரை கடந்து ஒகேனக்கல் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்களை இந்த வாகனத்தில் ஒகேனக்கலுக்கு அழைத்து சென்றார்களா என்று கேள்வி எழுந்துள்ளது

அஞ்செட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மலை கிராமங்களுக்கு செல்வதற்கு தேவையான அளவு பேருந்து வசதி இல்லாததால் அங்கு வாழும் பொதுமக்கள் இது போன்ற சரக்கு வாகனங்களை இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர் ஆட்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் அவ்வப்போது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி வரும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது எனவே இது போன்ற பயணங்களை காவல்துறை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: