தகப்பன் என்கிற முறையில் செய்த உதவியை தவறாக சித்தரிக்கின்றனர்: சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் விஸ்வநாதன்

சென்னை: தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று 4 கி.மீ. தூரம் சென்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு நான் செய்த முதலுதவி தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் மனிதாபிமான உணர்வோடு நான் செய்த உதவிகள் தவறாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. ஏதோ ஒருவகையில் எனது அணுகுமுறை தவறாக புரிந்து கொள்கிற நிலைமை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Stories: