மெக்சிகோ, தென்ஆப்ரிக்கா வெற்றி

 

 

உலக கோப்பையில் மெக்சிகோ சிட்டியில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் ஏ பிரிசில் மெக்சிகோ-செக்குடியரசு அணிகள் மோதின. இதில் மெக்சிகோவின் மேடியோ சாவேஸ் (55-வது நிமிடம்), ஜூலியன் குய்னோன்ஸ் (61-வது நிமிடம்) மற்றும் அல்வாரோ ஃபிடால்கோ (90+4வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். முடிவில் 3-0 என்ற கோல்கணக்கில் மெக்சிகோ வெற்றிபெற்றது. 3 போட்டிகளிலும் வென்ற மெக்சிகோ 9 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.மற்றொரு போட்டியில் இதே பிரிவில் தென்ஆப்ரிக்கா-தென்கொரியா மோதின.

இதில் ஆட்டத்தின் 63வதுநிமிடத்தில் தென்ஆப்ரிக்காவின் தபெலோ மசேகோ 63வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதுவே வெற்றிகோலாக அமைந்தது. 1-0 என தென்ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. 3 போட்டியில் 1வெற்றி, 1தோல்வி, ஒரு டை என 4 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து அடுத்தசுற்று வாய்ப்பை பெற்றது. தென்கொரியா 3 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுவாய்ப்புக்கு காத்திருக்கிறது. செக்குடியரசு வெளியேறி விட்டது.

Related Stories: