மகளிர் டி.20 உலக கோப்பை: வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இங்கி. அரையிறுதிக்கு தகுதி

 

லார்ட்ஸ்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஐசிசி மகளிர் டி.20உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 22வது லீக் ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டானி வியாட்-ஹாட்ஜ் 65 ரன் அடித்தார்.

பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களே எடுத்தது. இதனால் 38 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. 4 போட்டியிலும் வென்ற இங்கிலாந்து 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இன்று 2 போட்டி: இன்று இரவு 7 மணிக்கு குரூப் 1 பிரிவில் மான்செஸ்டரில் இந்தியா-வங்கதேசமும், இரவு 11 மணிக்கு தென்ஆப்ரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

Related Stories: