×

முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேப்பு விழா

 

முத்துப்பேட்டை,ஜூன் 25: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் 2026-2027ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சிதம்பர ராமஜெயம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இந்தாண்டின் தலைவராக அமிர்தா தியாகராஜன், செயலாளராக கிஷோர், பொருளாளராக முகைதீன்பிச்சை ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக முன்னாள் தலைவர் பாலச்சந்திரன் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக 2009-2010ஆம் ஆண்டு மாவட்ட ஆளுநர் கோவிந்தராஜ் கலந்துக்கொண்டு புதிய நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார். புதிய உறுப்பினர்களை மண்டலம் 29துணை ஆளுநர் சிதம்பர சபாபதி இணைத்து வைத்து பேசினார். இதில் 10,11.12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளி நிர்வாகிகளுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags : Muthupettai Rotary Association ,Muthupettai ,Tiruvarur district ,Chidambaram Ramajayam ,Amritha Thiagarajan ,Kishore ,Mukaidhinpichai ,
× RELATED பனப்பாளையத்தில் இன்று மின் தடை